fbpx

வேறொரு நபருடன் தொடர்பில் இருந்த மனைவி..! சிக்கிய கடிதம்.! மொத்த குடும்பத்தையும் தீர்த்துக் கட்டிய கணவன்..

மேற்குவங்க மாநிலத்தில் மனைவி வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் மொத்த குடும்பத்தையும் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்கு வங்கம் மாநிலம் பர்கானா மாவட்டம் கர்தா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் 55 வயதான பிருந்தாபன் என்ற நபர். இவரது மனைவி தேபஸ்ரீ. இந்த தம்பதியினருக்கு உத்சாஹா என்ற மகனும் டெபலீனா என்ற மகளும் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இவர்களது வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லை. மேலும் கடும் துர்நாற்றமும் வீச தொடங்கி இருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதி மக்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களது வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மொத்த குடும்பமும் இறந்து கிடந்துள்ளனர். பிருந்தாபன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்களது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, வீட்டை சோதனை செய்தபோது பிருந்தாபன் எழுதிய கடிதம் கிடைத்தது. அந்தக் கடிதத்தில் தனது மனைவி வேறொரு நபருடன் தகாத உறவில் இருந்ததாகவும் அதனை தன்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை எனவும் இதன் காரணமாக மொத்த குடும்பத்தையும் விஷம் வைத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் எழுதி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் மேலும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Kathir

Next Post

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு..! காவல்துறை அதிரடி..

Tue Nov 21 , 2023
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியானது. த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில், மன்சூர் அலிகான் விஜய்யின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தார். இதற்கிடையே, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், லியோ படத்தில் திரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும், நடிகை […]

You May Like