fbpx

வேலை நேரத்தில் மாற்றம்…! இனி காலை 9 மணி முதல் 4.45 வரை…! தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

அரசு பள்ளியில் பணிபுரியும் பணியாளர்களின் வேலை நேரமானது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில்‌, “பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ பணியாளர்களின்‌ வேலை நேரமானது காலை 10 மணி முதல்‌ 5.45 மணி வரையில்‌ உள்ளதால்‌, பள்ளி வருகைப்‌ பதிவேட்டை முடித்தல்‌, ஆசிரியர்களின்‌ விடுப்புகளை குறித்தல்‌, பிற அலுவல்‌ பணிகளை மேற்கொள்வதில்‌ நிர்வாக குறைபாடு ஏற்படுகிறது. பள்ளியின்‌ அலுவலகப்‌ பணிகளை மேற்கொள்ளவும்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ஆசிரியர்‌ இல்லாத பணியாளர்களின்‌ வேலை நேரம்‌ ஒருங்கிணைக்கப்பட வேண்டிய அவசியம்‌ மற்றும்‌ தேவை எழுகிறது.

மேலும்‌, அரசுப்‌ பள்ளிகளின்‌ நிர்வாக மேம்பாட்டிற்காக ஆசிரியர்‌ அல்லாத பணியாளர்களின்‌ பங்களிப்பு இன்றியமையாதது. எனவே, அரசு பள்ளிகளில்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்‌ அல்லாத பணியாளர்களான உதவியாளர்‌, இளநிலை உதவியாளர்களின்‌ வேலை நேரமானது காலை 9 மணி முதல்‌ மாலை 4.45 மணி வரையில்‌ மாற்றி அமைக்கப்படுகிறது. கோடை விடுமுறை, பள்ளி விடுமுறை நாட்களில்‌ ஆசிரியர்‌ அல்லாத பணியாளர்களின்‌ வேலை நேரமானது காலை 10 மணி முதல்‌ மாலை 5.45 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உங்க ரேஷன் கார்டில் மாற்றம் செய்ய வேண்டுமா...? வரும் 13-ம் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிப்பு...!

Thu May 11 , 2023
காஞ்சிபுரத்தில் வரும் 13-ம் தேதி பொது விநியோகத்திட்ட குறைதீர்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌, 13.05.2023 அன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம்‌ வட்டத்தில்‌ திருப்புட்குழி, உத்திரமேரூர்‌ வட்டத்தில்‌ தோட்டநாவல்‌, வாலாஜாபாத்‌ வட்டத்தில்‌ புத்தகரம்‌, திருப்பெரும்புதூர்‌ வட்டத்தில்‌ ஓ.எம்‌.மங்கலம்‌, குன்றத்தூர்‌ வட்டத்தில்‌ ஒரத்தூர்‌ ஆகிய கிராமங்களில்‌ பொது விநியோகத்திட்ட குறைதீர்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. மேற்கண்ட கிராமங்களில்‌ வசித்துவரும்‌ பொது மக்கள்‌ தங்கள்‌ குடும்ப அட்டையில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, […]

You May Like