இராமநாதபுரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை. இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது. ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.
ராமாயண காலத்திற்கு முன்பு இருந்தே, இந்தக் கோவில் சிறப்பு பெற்று விளங்கியதாக அறியப்படுகிறது. ராவணனும், அவர் மனைவியான மண்டோதரியும் வழிபட்டு வரம் பெற்றத் தலம் இது என்று கூறப்படுகிறது. ராவணனுக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே சென்றபோது, அவர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு திருமணப் பேறு பெற்றதாக வரலாற்று தகவல் காணப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள
ஸ்ரீ மங்களநாதர் சுவாமி திருக்கோயில்தான் உலகின் முதல் சிவன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் புனித தலங்களில் மிகச்சிறப்பான கோயிலாக கருதப்பட்டு வருகிறது. நவகிரகங்களை பற்றி அறியாத காலகட்டத்தில் சூரியன் சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களை மட்டும் வைத்து வழிபட்டு வந்தனர். உத்திரனான சிவபெருமான் தனது மனைவியான பார்வதி தேவிக்கு( மங்கைக்கு) வேத ரகசியங்களை கற்பித்த இடம் இது தான். இதனாலேயே இந்த இடத்திற்கு உத்திரகோசமங்கை என்ற பெயர் வர காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
5100 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்த ராமாயண காலத்திலும் உத்தரகோசமங்கை திருக்கோயில் இருந்து வந்ததாக வரலாற்று புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் அரசனான ராவணன் எனும் இலங்கேஸ்வரன் உத்திரகோசமங்கை திருக்கோயிலில் வந்து தரிசனம் செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் இக்கோயிலில் ஒரு நாளில் மூன்று முறை அபிஷேகம் நடக்கும்.
திருவாதிரை நாள் தான் சிவனை வழிபட சிறப்பான நாட்கள் என்பதால் அன்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். குறிப்பாக சிவ பக்தர்கள் இக்கோயிலில் வந்து மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் கூறப்பட்டு வருகின்றது.