fbpx

நிலநடுக்கத்தால் 4 பேர் பலி!… 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்! 25 ஆண்டுகளில் இல்லாத பயங்கரம்!…

taiwan Earthquake: தைவான் தீவின் கிழக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தைவானின் மத்திய வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தைவான் நாட்டில் ஹூவாலியன் நகரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 25 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக பல கட்டடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, 1999 ஆம் ஆண்டு 7.2 என்ற அளவில் Nantou county பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமே, தைவானில் அதிகபட்சமாக ஏற்பட்ட நிலநடுக்கமாகும். இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 2500 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 7.58 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, ரிக்டர் அளவுகோலில் 7.5 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தைவானின் பூகம்ப கண்காணிப்பு நிறுவனம், நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக இருந்ததாக தெரிவித்துள்ளது. இந்தநிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி 4 பேர் பலியாகியுள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாடு முழுவதிலும் ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தைவான் நிலநடுக்கம் எதிரொலியாக, ஜப்பானின் ஒகிராவில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 11 முறை வெவ்வேறு ரிக்டர் அளவுகோலில் தைவானில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தைவானின் வட பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஜப்பான் நாட்டின் தெற்கிலுள்ள தீவுகள், பிலிப்பைன்ஸ், சீனாவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள தீவுக்கூட்டங்களிலும் நில அதிர்வுகள் அதிகம் உணரப்பட்டுள்ளன.  3 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பி வருவதால், பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஜப்பான், பிலிப்பைன்ஸ், தைவான் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Readmore: “Myth vs Reality Register” தேர்தல் தொடர்பான போலி தகவல்…! புதிய இணையதளம் தொடக்கம்..‌!

Kokila

Next Post

மனித மூளையை ஸ்கேன் செய்த சக்திவாய்ந்த எம்ஆர்ஐ இயந்திரம்! தெளிவுடன் படம் பிடிக்கப்பட்ட உயிருள்ள மூளையின் படங்கள் வைரல்!

Wed Apr 3 , 2024
Strongest MRI: உலகின் மிக சக்திவாய்ந்த எம்ஆர்ஐ இயந்திரம் மூலம் எடுக்கப்பட்ட மனித மூளையின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பிரான்சின் அணுசக்தி ஆணையத்தின்(CEA) ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த மேம்பட்ட தொழில்நுட்பம் நமது மனம் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அவற்றை பாதிக்கும் நோய்கள் பற்றி தெளிவான நுண்ணறிவை வழங்குவதாக உறுதியளிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் 2021ம் ஆண்டு பூசணிக்காயை ஸ்கேன் செய்ய பயன்படுத்தப்பட்ட ஸ்கேனர், மனித மூளையை ஆய்வு செய்ய சுகாதார அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. […]

You May Like