வரிபாக்கி வைத்துள்ளவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் கூறினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முதன்மை தலைமை வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் நேற்று மதுரை வருமானவரித்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “மதுரை மண்டலத்தில் வருமானவரித்துறை வசூல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மதுரை மண்டலத்தில் 2ஆயிரத்தி 100கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது, அடுத்துவரும் நிதியாண்டுகளில் கூடுதலாக வரிவசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அகில இந்திய அளவில் தமிழகம் மற்றும் புதுச்சேரி 1லட்சத்தி 8ஆயிரம் கோடி இலக்கில் 70சதவிதம் வரி வசூலித்துள்ளோம் என்றும்,
அகில இந்திய அளவில் 17சதவித இலக்கை தாண்டி கூடுதலாக 11சதவிதம் வசூலித்தி 28 சதவீதம் வசூலித்துள்ளோம். வரும் நிதியாண்டில் 1.25ஆயிரம் கோடி வசூலிக்கவுள்ளோம் எனவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 67லட்சம். இதில் மதுரை மண்டலத்தில் மட்டும் 9லட்சம் பேர் உள்ளனர். கடந்த ஆண்டில் 1லட்சம் பேர் கூடுதலாக வரி செலுத்தியுள்ளனர், ஒவ்வொரு ஆண்டும் 10% புதிதாக வருமானவரி செலுத்துவோர் வருகின்றனர். வருமான வரி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.
மதுரை மண்டலத்தில் TDS ரிட்டன் குறித்து ஆலோசனை வழங்கினோம் என்றும், வருமானவரித்துறையின் வரி செலுத்துவோருக்கான சேவையை சிறப்பாக செய்துவருகிறோம், தற்போது வருமானவரியில் ரீ பண்ட் பிரச்சனை இல்லை, மதுரை மண்டலத்தில் இந்திய அளவில் வரிவசூல் மிகக்குறைவாகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வரிசெலுத்துவோரின் புகார்கள் மீது 30நாட்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4ஆயிரம் கோடி பட்ஜெட்டில் 3ஆயிரம் கோடி அரியர்ஸ் உள்ளது. வரிபாக்கி வைத்துள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், அவர்களது சொத்துகளை ஏலம் விடவுள்ளோம், அது வழியாக வரியை வசூலிக்கவுள்ளோம். தற்போது வரிபாக்கி வைத்துள்ளவர்களின் சொத்துகள் குறித்து ஆய்வுசெய்து வருகிறோம். வரிபாக்கி வைத்துள்ளவர்களுக்கான சிறப்பு முகாம் மூலமாக மதுரை மண்டலத்தில் 600பேர் பயனடைந்துள்ளனர். FORM -5ஐ வழங்கி வரிபாக்கி குறித்த பிரச்சனைகளை முடிவுகளை வழங்கிவருகிறோம்
இந்திய அளவில் வரி வசூலில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது, அகில இந்திய அளவில் 14லட்சம் கோடி இலக்காகவுள்ளது இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கொடுக்கப்பட்ட 1லட்சத்தி 8ஆயிரம் கோடி இலக்கில் 70சதவிதம் வசூலித்துள்ளோம். மதுரை மண்டலத்தில் 19 மாவட்டங்கள் உள்ளடக்கியுள்ளது. வரி செலுத்துவோரின் பிரதான கோரிக்கை என்பது வருமானவரியில் ரீபண்ட் வரவில்லை என்பது தான். ஆனால் தற்போது ரீ பண்ட் அதிகளவிற்கு கிடைக்கின்றது கடந்த ஆண்டை விட 150% ரீபண்ட் அதிகமாக கொடுத்துள்ளோம் அதனால் வரிவசூல் எண்ணிக்கை குறைவாக தெரிகிறது என்றார்.