காதலிக்க மறுத்த இளம் பெண்ணை, கத்தியால் குத்திய சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் , பெரியகுளம் வடகரை அழகர் சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 25). அதே பகுதியை சேர்ந்த ஹேமலதா என்ற கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இவர் தினமும் அந்த பெண்ணை பின் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ள,ல் நிலையில் அவர் அந்த பெண்ணிடம் காதலை கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த இளைஞர் பெண்ணின் வீட்டிற்கு சென்று பெற்றோர் முன்னிலையில் தான் வைத்திருந்த கத்தியை கொண்டு இளம் பெண்ணின் கழுத்து, முதுகு கைகளில் தொடர்ந்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
பெற்றோரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை மடக்கி பிடித்து பெரியகுளம் காவல் நிலைய போலீஸிடம் ஒப்படைத்தனர். இதனிடையில் படுகாயமடைந்த இளம் பெண்ணை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இளம் பெண் ணை வீட்டிலேயே சென்று கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.