தென்காசி மாவட்ட பகுதியில் செல்வகுமார் என்பவர் தனது மகன் ஆனந்துடன் வசித்து வருகிறார். மகன் மற்றும் உறவினர் சூரியராஜ் என்பவரும் ஒன்றாக சேர்ந்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளனர்.
இருவருமே ஒன்றாக மோட்டார் சைக்கிளில் சென்று சுற்றுபுற கிராமங்களில் பால் எடுத்துவிட்டு இரவு 11 மணி அளவில் வீடு திரும்புவார்கள். இதனை தொடர்ந்து அந்த பாலை மறுநாள் காலை மக்களிடம் வினியோகிப்பார்கள். நேற்று இரவு இவர்கள் பால் எடுக்கச் சென்ற நிலையில், காணாமல் போய் விட்டனர்.
இது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். உறவினர்களை அழைத்துக்கொண்டு நள்ளிரவில் 1 மணி அளவில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பலபத்திரராமபுரம் சேர்ந்த ஒரு காட்டுப்பகுதியில் ஆனந்த் மற்றும் சூரியராஜ் இருவரும் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தனர் .
ஆனந்திற்கும், அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பெண் பழக்கம் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. மேலும் சிலருடன் தொழில் போட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த காரணங்களால் கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.