fbpx

குழந்தைகள் மாஸ்க் அணிவதால் நன்மையை விட தீமைகள் தான் அதிகம்.. நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல மாநிலங்களில் மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கபப்ட்டுள்ளது.. அனைத்து வயதினருக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் மாஸ்க் அணிவதால் நோய் பரவும் போது கணிசமாக குறைவாக உள்ளது. ஆனால் அதே நேரம், தவறான முறையில் மாஸ்க் அணிவது, நோய்த்தொற்று பரவும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆம்.. குழந்தைகள் தொடர்ந்து மாஸ்க்கை தொட்டால் நோய்வாய்ப்படுவார்கள் என்று பொது மருத்துவரும் தொற்று நோய் நிபுணருமான சந்திரகாந்த் லஹரியா தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து பேசிய அவர் “ தொற்றுநோயின் உச்சத்தில் கூட, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவதற்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தவில்லை. குறிப்பாக 5 – 12 வயதுள்ள குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவதன் பலன் குறைவாக இருந்ததால் அவை தேவையில்லை. கொரோனா பரவலை தடுப்பதில் மாஸ்க் முக்கிய பங்கு வகித்தது.. புதிய மாறுபாடுகள் உருவான போது, சிலர் தடுப்பூசிகளைப் பெற்றிருந்தபோதும் நோய் பரவுவதைக் குறைப்பதில் மாஸ்க் பயனுள்ளதாக இருந்தது.

ஆனால் இப்போது, கொரோனா பரவலை குறைப்பதில் பொது சுகாதார நடவடிக்கையாக மாஸ்க் பங்கு குறைவாக உள்ளது. ஸ்பெயினில் பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் மாஸ்க்கின் பங்கு குறைவாக உள்ளது என்பது தெரியவந்தது.. பள்ளி வயது குழந்தைகளுக்கான பரவும் அபாயத்தை நிர்ணயிப்பதில் வயது, மிக முக்கியமான காரணி என்ற முடிவுக்கு ஆய்வின் ஆசிரியர்கள் வந்தனர். சில ஆராய்ச்சிகளின்படி, நீண்ட நேரம் அணியும் மாஸ்க்கின் உள்ளே கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது, மேலும் அந்த அளவு குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும்..

மாஸ்க் அணிவதால் குழந்தைகளின் விளையாட்டு தடுக்கப்படுகிறது. சர்வதேச தரத்தின்படி, 6 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டும்.. எனினும் மாஸ்க் அணிவது சிறந்த தனிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளாகும். அதிக ஆபத்துள்ள நபர்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மாஸ்க் அணியுமாறு வலியுறுத்தப்படுகிறது.. சுவாச நோய்களிலிருந்து பாதுகாக்க நாம் வாழ்க்கையில் குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவை குறிப்பாக பாதிப்பு மற்றும் தனிப்பட்ட ஆபத்தை அடிப்படையாகக் கொண்டவை..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

இது இல்லையென்றால் செல்போன் யூஸ் இல்லை!?... என்ன காரணம் என்பதை அறிந்துகொள்வோம்!

Sat Apr 15 , 2023
செல்போனில் அடிப்பகுதியில் சார்ஜ் போடப்படும் இடத்திற்கு அருகில் இருக்கும் சிறிய ஓட்டை எதற்காக இருக்கிறது என்பதை அறிந்துகொள்வோம். இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் செல்போன்களின் பயன்பாடு அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இந்த செல்போன்களில் பொருத்தப்பட்டுள்ள ஒவ்வொரு வடிவமைப்பும் ஒவ்வொரு காரணத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்படி செல்போன்களில் அமைக்கப்பட்டுள்ள சில வடிவமைப்புகள் குறித்து நமக்கு தெரியாமலே அதை யூஸ் பண்ணிட்டு இருக்கோம். அந்தவகையில், சார்ஜ் செய்யும் இடத்திற்கு அருகில் சிறிய ஓட்டை ஒன்று இருக்கும். […]

You May Like