fbpx

கிழக்கு திசை காற்றில் நிலவும் வேகமாறுபாடு.. இன்று தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…!

கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது .

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட், குறைந்தபட்ச வெப்பநிலை 69.8-71.6 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய மன்னார் வளைகுடா, மத்திய மேற்கு அரபிக் கடலின் மேற்குப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 55 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English Summary

There is a change in the speed of the easterly wind.. Chance of rain in South Tamil Nadu today

Vignesh

Next Post

பரபரப்பு...! பாலியல் குற்றவாளி ஞானசேகரன் திடீரென மருத்துவமனையில் அனுமதி...!

Wed Jan 22 , 2025
Sex offender Gnanasekaran suddenly admitted to hospital

You May Like