fbpx

Rain Alert: அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது…! வானிலை ஆய்வு மையம் தகவல்…!

தமிழகத்தில் வரும் 17-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக வரும் 17, 18, 19-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 20-ம் தேதி வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை சில இடங்களில் வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும். இன்று வட தமிழத்திலும், வரும் 16, 17-ம் தேதிகளிலும் தமிழகத்திலும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை காரணமாக அசவுகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English Summary

There is a possibility of rain for the next 3 days…! Meteorological Department information

Vignesh

Next Post

சரியாக காது கேட்கவில்லையா?? கவலையே வேண்டாம், வீட்டில் இருந்தே இதை செய்து பாருங்கள், உங்களுக்கே வித்தியாசம் தெரியும்..

Sat Mar 15 , 2025
home remedy to cure deaf

You May Like