fbpx

மகிழ்ச்சி செய்தி…! இந்த 1 கோடி பேருக்கு மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை…!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 2.47 கோடி வீட்டு மின் நுகர்வோர்களில், 1 கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 2024-25 ஆண்டுக்கான மின் கட்டணத்தை பணவீக்க விகித அடிப்படையில் மாற்றியமைத்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி குடியிருப்புகளுக்கு 1 முதல் 400 யூனிட் வரை, ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.60-ல் இருந்து ரூ.4.80 ஆகவும், 401-500 யூனிட் வரை ரூ.6.15-ல் இருந்து ரூ.6.45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 501-600 யூனிட் வரை ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆகவும், 601-800 யூனிட் வரை ரூ.9.20-ல் இருந்து ரூ.9.65 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 801-1000 யூனிட் வரை ரூ.10.20-ல் இருந்து ரூ.10.70 ஆகவும், 1000 யூனிட்டுக்கு மேல் ரூ.11.25-ல் இருந்து ரூ.11.80 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டு வசதிகள், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தெருவிளக்கு, குடிநீர் விநியோகத்துக்கான மின்கட்டணம் ஒரு யூனிட் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்ந்துள்ளது. விவசாய பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60-ல் இருந்து ரூ.4.80 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 2.47 கோடி வீட்டு மின் நுகர்வோர்களில், 1 கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

English Summary

There is no change in electricity bill for 1 crore people

Vignesh

Next Post

இந்தியாவை அச்சுறுத்தும் சாண்டிபுரா வைரஸ்!. 9 பேருக்கு பாசிட்டிவ்!. அறிகுறிகள் இதோ!

Tue Jul 16 , 2024
Sandipura virus threatening India! Positive for 9 people! Here are the signs!

You May Like