fbpx

திருப்பத்தூர் , கோவை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது…! ஆட்சியர் அறிவிப்பு…!

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி தாலுக்காகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை‌.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது. மழை இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது. மழை இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி தாலுக்காகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதி கனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். மேலும் லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்க கூடாது. தொடர்ந்து, விடுமுறை குறித்த முடிவை பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும். மாவட்டம் முழுவதுமான மழை நிலவரம், பாதிப்புகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

அதிர்ச்சி..!! காங்கிரஸ் தேர்தலில் நடிகர் அஜித் பெயரில் போலி வாக்காளர் அட்டை..!! நடந்தது என்ன..?

Fri Nov 24 , 2023
கேரளாவில் காங்கிரஸ் தேர்தலில் போலி வாக்காளர் அட்டைகள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு வாக்காளர் அட்டை நடிகர் அஜித் பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்தில், கேரள இளைஞர் காங்கிரஸ் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், போலி வாக்காளர் அட்டைகள் பயன்படுத்தப்பட்டாக புகார் எழுந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணை அந்த குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தது. இதுதொடர்பாக 4 இளைஞர் காங்கிரஸார் கைது […]

You May Like