fbpx

‘கூட்டமே இல்ல’..!! நாளை முதல் 2 வாரங்களுக்கு திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிப்பு..!!

திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக சினிமா துறையில் இருக்கும் பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். சமீபத்தில் தமிழ் சினிமாவில் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்து ரசிகர்களை தியேட்டருக்கு இழுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. அந்தவகையில், விஜய்யின் கில்லி உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டன.

இந்நிலையில், பல முக்கிய தியேட்டர்களில் படம் பார்க்க ஆள் வராத காரணத்தால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது தமிழ்நாட்டில் இல்லை தெலங்கானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு பிறகு தெலுங்கில் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால், திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை மிக சிறிய அளவே இருக்கிறதாம். மேலும், ஐபிஎல் போட்டியால் அந்த எண்ணிக்கை மேலும் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வரும் 17ஆம் தேதி முதல் அடுத்த 10 நாட்கள் அல்லது இரண்டு வாரங்களுக்கு தியேட்டர்களை மூட இருப்பதாக தெலங்கானா தியேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Read More : மாதந்தோறும் ரூ.5,500 வருமானம் வேண்டுமா..!! போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!!

Chella

Next Post

Workplace செயலியை மொத்தமா மூடும் மெட்டா நிறுவனம்..!

Thu May 16 , 2024
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தங்களுடைய வொர்க்பிளேஸ் செயலியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. உலகின் முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்துமே தற்போது செயற்கை நுண்ணறிவு பிரிவில் தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றன. மெட்டா நிறுவனமும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பங்களுக்கு அதிக பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளது. எனவே மற்ற செலவினங்களையும் செயல்பாடுகளையும் குறைத்து கொள்ள மெட்டா முடிவெடுத்துள்ளது. வொர்க்பிளேஸ் என்ற செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு மெட்டா நிறுவனத்தால் […]

You May Like