தமிழ்நாடு அரசின் வேளாண்மை – உழவர் நலத்துறை உள்ளிட்ட 13 அரசு துறைகளின் திட்டங்களில் விவசாயிகள் பயன்பெபறும் வகையில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக GRAINS என்ற வலைதளத்தில் விவசாயிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெறமுடியும். விவசாயிகள் ஒவ்வொரு முறையும் அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்பிக்க வேண்டியதில்லை. மேலும் விவசாயிகளின் விவரங்கள் வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறமுடியும். இதன் மூலம் வரும் காலங்களில் நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் வங்கி கணக்கிற்கு நேரடி பண பரிமாற்றம் செய்யப்படும்.
எனவே, இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட ஆதார் எண், புகைப்படம்,வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் நில உரிமை ஆவணங்களுடன் சம்பந்தப்பட்டகிராம நிர்வாக அலுவலர் அல்லது உதவி வேளாண்மை அலுவலர் அல்லது உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகி பதிவு செய்துகொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.