fbpx

“மழை எதிரொலி”..! பள்ளிகளில் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமா.? செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பதில்.!

தமிழகத்தில் பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருக்கிறார் . தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கனமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் பெய்த கன மழை மற்றும் புயலால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது.

இதில் பல வீடுகள் சேதம் அடைந்ததோடு பள்ளி மாணவ மாணவிகளின் நோட்டுப் புத்தகங்களும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் புயல் மற்றும் மழை காரணமாக பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறை வழங்கப்பட்டு வந்தது . இதனால் மாணவர்களுக்கு படிக்க வசதியாக பொது தேர்வு நடைபெறும் தேதிகளில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு தேதிகளில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவித்திருக்கிறார்.

மேலும் 10,11,12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு பற்றிய விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் மே மாதம் 6 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 10 ஆம் தேதியும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 14ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவித்திருக்கிறார். பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகம் சார்பில் தயாரிக்கப்பட்டு இருக்கும் வினா வங்கி வெளியீட்டு விழாவில் அவர் இந்த தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து உள்ளார்.

Next Post

"ராகுலும் மோடியும் ஒண்ணா.?.." புதிய சர்ச்சையில் சிக்கிய கார்த்தி சிதம்பரம்.! விளக்கம் கேட்டு நோட்டீஸ்.!

Tue Jan 9 , 2024
காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கார்த்திக் சிதம்பரம். இவர் முன்னாள் நிதியமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பா.சிதம்பரத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் இவர் கூறி வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது . தற்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் ராகுல் காந்தியை பற்றி இவரளித்த பேட்டி காங்கிரஸ் கட்சியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. […]

You May Like