fbpx

மக்களே… வரும் 31-ம் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது…! தமிழக அரசு அறிவிப்பு..

31.08.2024 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் 39 மாவட்டங்களில் 34793 ரேஷன் கடைகள் உள்ளன. 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 674 ரேஷன் கார்டு கள் உள்ளன. ரேஷன் கடைகளில் வழக்கமாக மாதத்தின் இறுதி நாளில் பொருள்கள் விநியோகிக்கப்படாது. ஆனால் இந்த மாதம் ஆகஸ்ட் 31-ம் தேதி அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் அனைத்துக் கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை.

ஆனால் இம்மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இன்றியமையாப் பண்டங்கள் தடையின்றி கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வருகின்ற 31.08.2024 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளில் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 2024 மாதத்திற்கான பொருட்கள் பெறாத அட்டைதாரர்கள் பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

There will be no holiday for ration shops on the 31st

Vignesh

Next Post

நாடு முழுவதும் 12 தொழில் முனையங்கள் நகரங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...!

Thu Aug 29 , 2024
Union Cabinet approves 12 industrial terminal cities

You May Like