fbpx

“முன்னாள் மத்திய அமைச்சர் மகனுக்கு சீட் தரக்கூடாது..” காங்கிரஸ் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்..!!

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தற்போது எம்பி யாக இருந்து வரும் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்கக் கூடாது என சிவகங்கை காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்காக தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸின் மூத்த தலைவர்களான சுதர்சன நாச்சியப்பன், K.R ராமசாமி உட்பட 80-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யும் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து காங்கிரஸ் தலைமைக்கு எதிராக பேசிய வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர் .

ராகுல் காந்தியை விமர்சித்தும் பிரதமர் மோடியை ஆதரித்தும் தொடர்ந்து தனது கருத்துக்களை பகிர்ந்து வரும் கார்த்தி சிதம்பரத்திற்கு இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட அனுமதி வழங்கக் கூடாது என்ற தீர்மானம் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஏற்கனவே திமுக நிர்வாகிகளும் சிவகங்கை தொகுதியை காங்கிரஸ் உட்பட எந்த கூட்டணி கட்சிகளுக்கும் கொடுக்கக் கூடாது என தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Post

"அம்மா என்ன சரியாவே பாத்துக்கல.." பெத்த தாயை கொலை செய்த '17' வயது சிறுவன்..!! பரபரப்பு வாக்குமூலம்.!

Sat Feb 3 , 2024
பெங்களூர் நகரில் 41 வயது பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக அந்த பெண்ணின் 17 வயது மகன் காவல்துறையில் சரணடைந்துள்ளார். பெங்களூர் நகரின் ஜஸ்ட் பீமையா லேஅவுட்டில் வசித்து வருபவர் நேத்ரா(41). இவரது மகன் கல்லூரியில் படித்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் கல்லூரிக்கு தயாராகிக் கொண்டிருந்த சிறுவன் தனக்கு விரைவாக உணவு சமைத்து கொடுக்குமாறு தாயிடம் கேட்டிருக்கிறார். இது தொடர்பாக தாய் […]

You May Like