fbpx

கனமழை வெளுத்து வாங்கப் போகும் மாவட்டங்கள் இவைதான்.. வானிலை மையம் எச்சரிக்கை..

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வட தமிழகம்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளில்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், கடலூர், டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூார்‌, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, திருச்சி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை பெரம்பலூர்‌, அரியலூர்‌, சிவகங்கை, மதுரை, தென்காசி, நெல்லை மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 4,5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி,திண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோர பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.. எனவே இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

பிரம்மாண்ட செட்டிற்குள் கே ஜி எஃப் விநாயகர்; தேன்கனிக்கோட்டையில் கோலாகல கொண்டாட்டம்..!

Thu Sep 1 , 2022
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு, ராஜ மார்த்தாண்ட பக்த மண்டலி சார்பில் கே.ஜி.எப்., பட பாணியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. கே.ஜி.எப். படத்திற்கு செட் உருவாக்கிய குழுவினரை வரவழைத்து செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செட்டில் கே.ஜி.எப்., திரைப்படத்தில் உள்ளது போல், காளி உருவம் நிற்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அங்கு உருவாக்கப்பட்டுள்ள குகைக்கு உள்ளே சென்றால் கே.ஜி.எப்., விநாயகர் […]

You May Like