உடலில் யூரிக் அமிலம் அதிகமானால், மூட்டுகளில் பவி, கீல்வாத பிரச்சனை, உடல் சோர்வு என பல சிக்ககள் ஏற்படும். பலருக்கு யூரிக் அமில வெளியேற்றம் பாதிக்கப்படு, உடலில் யூரிக் அமில அளவு அதிகமாகி விடுகின்றது. இதனால் பல வித உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றான. யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் சில இயற்கையான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
யூரிக் அமிலம் என்பது உடலில் உள்ள பியூரின்களின் சிதைவால் உற்பத்தி செய்யப்படும் ஒரு இரசாயனமாகும். இது உடலில் இருந்து கழிவுப் பொருளாக, சிறுநீராக வெளியேற்றப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் யூரிக் அமிலம் சரியாக வெளியேறாமல் உடலில் சேரும். இது பல வகையான சேதங்களை ஏற்படுத்துகிறது. மூட்டுவலி அதன் முக்கிய அறிகுறியாகும். வயதானவர்களுக்கு இது ஒரு பொதுவான பிரச்சனை. பியூரின்கள் சில உணவுகளில் அதிக அளவில் காணப்படும் கலவைகள் ஆகும். யூரிக் ஆசிட் படிகங்களை எளிதில் உடைத்து, சிறுநீர் மூலம் உடலில் இருந்து வெளியேற்ற உங்கள் தினசரி உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.
சாப்பிட வேண்டிய உணவுகள்
யூரிக் அமில அளவு அதிகம் உள்ளவர்கள் கீரை சாப்பிடுவதன் மூலம் யூரிக் அமில அளவை எளிதில் கட்டுப்படுத்தலாம். கீரையில் இருந்து சாறு செய்து சாப்பிடலாம். ஒரு ஸ்பூன் கீரையை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் கொதிக்க வைத்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
முந்திரி, கீரைகள் மற்றும் முழு தானியங்களை தினமும் சாப்பிடுங்கள். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், யூரிக் அமிலம் குறைவது மட்டுமின்றி, சிறுநீரகம் சீராக செயல்படும். எலுமிச்சை, ஆரஞ்சு, பூசணி, தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை தினமும் சாப்பிடுவது யூரிக் அமிலத்தை இயற்கையாகவே குறைக்கும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சாப்பிடக்கூடாத உணவுகள்
இனிப்புகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு யூரிக் அமிலம் அதிகரிக்கும். இனிப்புகளை குறைக்கவும். இனிப்பு சத்துள்ள பழங்களை அதிகம் சாப்பிட வேண்டாம். மது அருந்துவதையும் புகைப்பதையும் தவிர்க்கவும். சிலருக்கு அதிக அளவு யூரிக் அமிலம் சிறுநீரக கற்களை உண்டாக்கும். அதிக அளவு யூரிக் அமிலம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
யூரிக் அமில நோயாளிகள் பருப்பு வகைகளை உட்கொள்வதை குறைக்க வேண்டும். அதிக யூரிக் அமிலம் உள்ளவர்கள் இவற்றை முடிந்தவரை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் பிரச்னை பெரிதாகாது. அதுமட்டுமின்றி, அதிக புரத உணவுகளை உட்கொள்வதை குறைக்க வேண்டும். சைவ உணவு உண்பவர்கள் இது தொடர்பாக மருத்துவர் அல்லது உணவு நிபுணரை அணுகி உணவுமுறையை தயார் செய்து கொள்ளலாம்.
அசைவ உணவால் சிக்கல்
மருத்துவர்களின் கூற்றுப்படி, அசைவ உணவுகளில் உள்ள யூரிக் அமிலம் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. சிவப்பு இறைச்சி யூரிக் அமில நோயாளிகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இதில் அதிக அளவு பியூரின்கள் உள்ளன. இது யூரிக் அமிலத்தை விரைவாக உயர்த்துகிறது. யூரிக் அமில நோயாளிகள் கடல் உணவுகள், சிவப்பு இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சீரான உணவு மற்றும் வழக்கமான உடல் செயல்பாடு யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த பயனுள்ள வழிகளாக கருதப்படுகிறது. இருப்பினும், கடுமையான பிரச்சினைகள் உள்ளவர்கள் ஆலோசனைக்கு மருத்துவரை அணுக வேண்டும். யூரிக் அமிலத்தை அலட்சியம் செய்வது மிகவும் ஆபத்தானது.