நமது முன்னோர்கள் உணவை மருந்தாக சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் நாம் மருந்தை உணவாக சாப்பிட்டு வருகிறோம். உடல் ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவில் தான் உள்ளது. இதனால் நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் இன்றுள்ள காலகட்டத்தில் பார்ப்பதற்கு அழகாக இருப்பதை எல்லாம் வாங்கி சாப்பிடுகின்றனர்.
இதனால் தான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் சமீப நாட்களாக ஒரு சிலர் தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த துவங்கி விட்டனர். இதனால் ஆரோக்கியமான உணவுகளை தாங்கள் விரும்பு வகையில் சுவையாகவும் விதவிதமாகவும் சமைத்து சாப்பிடுகின்றனர். ஆனால் ஒரு சில உணவுகளை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவது தான் நல்லது.
அப்போது தான் அந்த உணவில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். எந்த உணவுகளை எல்லாம் பச்சையாக சாப்பிடுவது என்பது தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்.. இந்த வரிசையில் முதல் இடத்தில இருப்பது கேரட். பீட்டா கரோட்டீன் என்னும் வைட்டமின் ஏ இதில் அதிகம் உள்ளது. இதை பச்சையாக சாப்பிடும் போது தான் அதிலுள்ள வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கும்.
அடுத்ததாக ஸ்பின்னாச், பசலை கீரை வகையை சேர்ந்த இதை பச்சையாக சாப்பிடும்போது தான் அதிலுள்ள வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் ஆகியவை முழுமையாகக் கிடைக்கும். இதனை சாலட் ஆகியவற்றில் பச்சையாக சேர்த்து சாப்பிடலாம். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தற்போது பலர், நட்ஸை நெய்யில் வறுத்து, மசாலா சேர்த்து அல்லது லட்டுகளாக சாப்பிடுகின்றனர்.
ஆனால் அது முற்றிலும் தவறு. நட்ஸை பச்சையாக சாபிட்டால் தான் அதன் முழு சத்தும் கிடைக்கும். இல்லையென்றால், அதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் பிற மினரல்களின் சத்துக்கள் முழுமையாக கிடைக்காது. அடுத்ததாக, பூண்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவது நல்லது. பூண்டை பச்சையாக சாப்பிடும் போது தான், அல்லிசின் என்னும் ஆற்றல் மிக்க மூலக்கூறு நமக்கு முழுமையாக கிடைக்கும்.
அதே போல், குடை மிளகாய், பெர்ரி வகையை சேர்ந்த பழங்களையும் பச்சையாகத்தான் சாப்பிட வேண்டும்.
Read more: மாரடைப்பு ஏற்படாமல், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமா? அப்போ சமையலுக்கு இந்த எண்ணெய் பயன்படுத்துங்க..