fbpx

அக்.1 முதல் இந்த ஓய்வூதிய திட்டத்தில் இவர்களுக்கு அனுமதி இல்லை.. அரசு அறிவிப்பு..

அக்டோபர் 1, முதல் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேர வருமான வரி செலுத்துவோருக்கு அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது..

அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கில், 2015ல் தொடங்கப்பட்ட அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வருமான வரி செலுத்துவோர் அடல் பென்ஷன் யோஜனாவுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டாம் என்று நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.. இந்த புதிய உத்தரவு 2022 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது.

மத்திய நிதி அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ வருமான வரிச் சட்டத்தின்படி வருமான வரி செலுத்தும் எந்தவொரு இந்திய குடிமகனும் அக்டோபர் 1, 2022 முதல் அடல் பென்ஷன் யோஜனாவில் சேரத் தகுதி பெறமாட்டார்கள். அக்டோபர் 1ம் தேதி அல்லது அதற்குப் பிறகு யாராவது இந்தத் திட்டத்தில் சேர்ந்து வருமான வரி செலுத்துபவராகக் கண்டறியப்பட்டால், அவர்களின் கணக்கு உடனடியாக மூடப்படும் அதுவரை டெபாசிட் செய்யப்பட்ட ஓய்வூதியத் தொகையும் திருப்பித் தரப்படும்.. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

அடல் பென்ஷன் யோஜனாவிற்கு விண்ணப்பிக்க என்ன விதிகள் உள்ளன..? தற்போதைய விதிகளின்படி, எந்தவொரு வங்கியிலும் அல்லது தபால் அலுவலகத்திலும் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் 18-40 வயதுக்குட்பட்ட எந்தவொரு குடிமகனும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 1, 2022 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி, வருமான வரி செலுத்துவோர் அடல் பென்ஷன் யோஜனாவில் பங்கேற்க முடியாது.. மேலும் இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது.

Maha

Next Post

வகுப்பறைக்குள் மாணவர்கள் நடத்திய கிளுகிளுப்பு சம்பவம்.. வீடியோ பரவியதால் பரபரப்பு..!

Fri Aug 12 , 2022
அசாம் மாநிலம் தெற்கு அசாம் பகுதியில் இருக்கும் சில்சார் அருகே ராமானுஜ் குப்தா என்ற கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 11ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவ மாணவிகள் வகுப்பறையில் கட்டிப் பிடித்துக்கொண்டும், நெருக்கமாக உட்கார்ந்து தொட்டுப் பேசிக்கொண்டும் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதை அங்கிருந்த மாணவர் ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பரப்பியுள்ளார். இந்த வீடியோ பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் […]

You May Like