fbpx

திக்!. திக்!. 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. அலறும் மும்பை!

Bomb threat: மும்பை நகரம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், மும்பையில் உள்ள 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன.

ஜஸ்லோக் மருத்துவமனை, ரஹேஜா மருத்துவமனை, செவன் ஹில் மருத்துவமனை, கோஹினூர் மருத்துவமனை, கேஇஎம் மருத்துவமனை, ஜேஜே மருத்துவமனை, செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனை மற்றும் பலருக்கு மிரட்டல்கள் வந்தன. VPN நெட்வொர்க்கைப் பயன்படுத்தி அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களால், நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்புக் கவலைகளை எழுப்பியுள்ளன. இதனை உறுதிபடுத்திய மும்பை போலீசார், நகரம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், மும்பையில் உள்ள இந்துஜா வர்த்தக கல்லூரிக்கும் இ-மெயில் ஒன்று நேற்று இரவு வந்தது. அதில், கல்லுரியை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, உள்ளூர் போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழு ஆகியோர் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். எனினும், சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை.

முன்னதாக, சென்னை, பாட்னா மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட 41 விமான நிலையங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருந்தது. எனினும், தீவிர சோதனைக்கு பின்னர் இந்த மிரட்டல் புரளி என தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

Readmore: WOW!. பொதுத் தேர்தலில் போட்டியிடும் “AI ஸ்டீவ்” வேட்பாளர்!. அரசியலில் ஒரு திருப்புமுனை!. இதனால் என்ன பயன்?

English Summary

Bomb threat emails sent to over 50 hospitals in Mumbai using VPN Network

Kokila

Next Post

போலி ஆவணம்!. 6.8 லட்சம் கனெக்ஷன்!. மொபைல் இணையப் பாதுகாப்பு!. செய்ய வேண்டியவை!. செய்யக்கூடாதவை!

Wed Jun 19 , 2024
6.8 lakh mobile connections under Govt scanner - Here's why

You May Like