பெரியவர்கள் சிறியவர்கள் என வயது வித்யாசம் இன்றி, பலருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது நியாபக மறதி தான். குறிப்பாக, மாணவர்கள் தேர்வுக்கு நன்கு படிதாலும், ஞாபக மறதி இருந்தால், படித்தே பிரயோஜனம் இல்லாமல் போய்விடும். இதனால் மாணவர்கள் பலர் பெரும் அவதி படுகிறார்கள். சிறிய விஷயங்களை மறப்பதில் இருந்து தொடங்கும் இந்த பிரச்சனை, பின்னர் படிப்படியாக தீவிரம் அடைகிறது. இது போன்ற பிரச்சனைக்கு முக்கிய காரணம், மன அழுத்தம், எல்லாவற்றையும் குறித்து கவலைப்படுவது. இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, ஒரு சில விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டும்.
ஆம், சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதாலும் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். நாம் உண்ணும் உணவுகள் தான், நமது மூளை சிறப்பாக செயல்பட முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒமேகா – 3 என்னும் ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த உணவுகள் தான், மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த உணவுகள், மூளையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதற்க்கு நீங்கள், பாதாம், வாதுமை பருப்பு, மீன்கள், பச்சை காய்கறிகள் உள்ளிட்டவற்றை சாப்பிட வேண்டும். உணவு மட்டும் இல்லாமல், உடலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும்.
உடல் சுறுசுறுப்பாக இருந்தால் தான், மூளையையும் ஆக்டிவாக இருக்கும். இதனால் தினமும், உங்களால் முடிந்தவரை உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்ய வேண்டும். படிக்கும் மாணவர்களுக்கு சற்று உடற்பயிற்சி செய்ய நேரம் கொடுக்க வேண்டும். படிக்க மட்டுமே செய்தால், அவர்களுக்கு நியாபக மறதி ஏற்படும். அவர்கள் உடற்பயிற்சி செய்தால் தான், நன்கு படிக்கவும் முடியும், படித்தது நியாபகம் இருக்கும். ஏதாவது ஒரு கலை அல்லது மொழியை கற்றுக்கொள்வதால் மறதி நோயை தடுக்க உதவும். இதனால் சிறு வயது முதல் உங்கள் குழந்தைளுக்கு ஏதாவது ஒரு கலையை கற்றுக்கொடுங்கள்.