நம் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்குவகிப்பது உடல் எடை. பலரும் உடல் எடையை குறைக்க போராடும் இந்த நேரத்தில் நம் அன்றாடம் இரவில் செய்யும் சில தவறுகளை திருத்திக் கொள்வதன் மூலம் உடல் எடை குறைப்பில் பெரிய அடி எடுத்து வைக்க முடியும்.
இரவில் உணவு உண்டதற்கு பிறகு நாம் செய்யும் மிகப்பெரிய தவறு அப்படியே டிவி, மொபைல் பார்த்துக்கொண்டு சோபா, கட்டிலில் படுத்துக்கொள்வது. உணவு உண்டபின் உடலுக்கு பெரிய அசைவுகளை கொடுக்காமல் அப்படியே மந்த நிலையில் வைப்பது செரிமானத்தை சிக்கலாகும். 15-20 நிமிடங்கள் நடப்பது, எளிய சிறு உடற்பயிற்சிகள் செய்வது வயிற்றை இலகுவாக்கி செரிமானத்தை துரிதப்படுத்தும்.
இரவில் காபி, டீ அருந்துவது முற்றிலும் தவறு. இது தூக்கைத்தை பாதிக்கிறது. உடல் எடை குறைப்பில் நிம்மதியான தூக்கத்திற்கு முக்கியப்பங்கு உண்டு. ஒரு மனிதன் சராசரியாக 7-8 மணி நேரம் தூங்க வேண்டும். இது வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
இரவில் அதிகப்படியான நொறுக்கு தீனிகள், பாஸ்ட் புட்களை சாப்பிடுவது முற்றிலும் தவறு. இதனால் உடலுக்கு தேவைக்கு அதிகமாக அதிக கலோரிகள் எடுக்கப்படும். இது செரிமான பிரச்சனையை உண்டுபண்ணி வளர்ச்சிதை மாற்றத்தை கெடுக்கும். அளவாக உணவு உட்கொண்டு சிறிது நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, மொபைல் டிவிகளுக்கு விடை கொடுத்து மூளையை ரிலாஸ்க் செய்யும் விதத்தில் தூங்க செல்வது மற்றும் 7 முதல் 8 மணி நேரங்கள் உறங்குவது இவை அனைத்தும் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்காக அமைகிறது.
Read more: வெளிநாடுகளில் தீவிர ஆய்வு.. அந்த அளவிற்கு முருங்கைக்கீரையில் என்ன இருக்கு தெரியுமா..?