fbpx

5000 ஆண்டுகள் பழமையானது.. தீராத நோய்களை தீர்க்கும் மகிமை இந்த கோயிலுக்கு உண்டு..!! எங்க இருக்கு தெரியுமா..?

திருவள்ளூர் வீரராகவசுவாமி கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னைக்கு அருகில் திருவள்ளூரில் இக்கோயில் அமைந்துள்ளது. இத்தலம் திருமழிசை ஆழ்வார், திருநங்கை ஆழ்வார், துப்பூர் வேதாந்த தேசிகன் உள்ளிட்டோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்பது இதன் தனிச்சிறப்பு.

இத்திருக்கோவிலை அகோபில மடம் பராமரித்து வருகிறது. இத்திருக்கோவில் ஐந்தடுக்கு இராசகோபுரத்துடன் (பிரதான வாயில்) பல்லவர்களால் கட்டப்பட்டது ஆகும். கனகவள்ளி அம்மையார், கணேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், இராமானுச ஆச்சாரியார், லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு இங்கு தனித் தனியே சிறு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்குதான் இறைவன் அரசன் தர்மசேனனின் மகள் வசுமதியைத் திருக்கல்யாணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இங்குள்ள கல்வெட்டுகள் 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர்களின் இரண்டாவது பாதியைக் குறிப்பிடுகின்றன. இக்கோவில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என உள்ளூரில் புழக்கத்திலுள்ள புராணக் கதைகள் தெரிவிக்கின்றன. விஷ்ணுவே வீரராகவப் பெருமாளாக இக்கோவிலில் குடி கொண்டுள்ளார்.

இக்கோவிலின் இறைவன் “வைத்திய வீரராகவர்” என்றும் அழைக்கப்படுகிறார். தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் மக்கள் சிறிய உலோகத் தகட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைச் செதுக்கி அந்நோயைத் தீர்த்து வைக்குமாறு கடவுளிடம் கோரிக்கை சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Read more : Vastu Tips | கணவன் மனைவி இடையே காதல் நீடிக்க.. படுக்கையறையில் இந்த வாஸ்து குறிப்புகளை பின்பற்றுங்க..!!

English Summary

Thiruvallur Veeraragavaswamy Temple is one of the 108 Vaishnava shrines.

Next Post

இடுப்பை சுற்றி தொங்கும் கொழுப்பை கரைக்கணுமா? அப்போ மோரை இப்படி குடியுங்க.. கண்டிப்பா உங்களுக்கே வித்யாசம் தெரியும்..

Tue Feb 25 , 2025
health benefits of buttermilk

You May Like