திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள படவேடு பகுதியில் நிலத்தகராறு காரணமாக, இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக 20க்கும் அதிகமானோர் ராணுவ வீரர் பிரபாகரன் என்பவரின் மனைவியை தாக்கியதில் ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி கீர்த்தி வேலூர் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ராணுவ வீரர் பிரபாகர் வெளியிட்ட வீடியோவில் நிலப்பிரச்சனையின் காரணமாக, தன்னுடைய மனைவியை ஏராளமான நபர்கள் தன்னுடைய மனைவியை கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்டவற்றால் தாக்கியதாக கூறியுள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் வழங்கியதாகவும் அவர் சரியான நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்திருப்பதாகவும் கூறியுள்ளார். ஒரு ராணுவ வீரரின் மனைவியை அரை நிர்வாணமாக்கி மிகவும் மோசமாக அடித்து இருக்கிறார்கள் இது எந்த உலகத்தில் நியாயம்? என் மனைவியை காப்பாற்றுமாறு கையெழுத்து கும்பிட்டு ராணுவ வீரர் கதறி இருக்கிறார்.
https://twitter.com/NTR_NationFirst/status/1667899120244371456?s=20
இந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூழ்நிலையில், இது குறித்தும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் ஆலயம் அருகே ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி கீர்த்தி பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வந்தார். இந்த கடையின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளனர்.
அப்போது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பொருட்களை சூறையாடி சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கந்தவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் எதிர் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாக கீர்த்தி மற்றும் அவருடைய சகோதரர்கள் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி தாக்கிய சம்பவத்தின் மீது உரிய விசாரணை செய்து அறிக்கை வழங்குமாறு திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.