தனது நண்பரின் மகளை பலாத்காரம் செய்த வழக்கில் 33 வயது நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு, மகாராஷ்டிர மாநிலம், மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி தனக்கு வயிற்று வலி இருப்பதாக தனது தாயிடம் கூறியதை அடுத்து, மருத்துவமனைக்கு சென்று பார்த்ததில் அவர் 4 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. தனது தந்தையின் நண்பர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் மகள் தனது தாயிடம் கூறியுள்ளார். அடுத்த வாரம் தான் மீண்டும் பாலியல் வன்கொடுமை சிறுமி தனது தாயிடம் கூறினார். இதை தொடர்ந்து தாய் கொடுத்த புகாரின் பேரில், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, அந்த நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் போக்சோ ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது குற்றம்சாட்டப்பட்ட நபர், சிறுமி தனது பெயரை மாஜிஸ்திரேட்டுக்கு முன் தெரிவிக்கவில்லை என்று வாதிட்டார்.. மேலும் மார்ச் மாதம் இந்த சம்பவம் நடந்ததாக சிறுமி கூறியிருந்தாலும், அவரின் குடும்பத்தினர் மே மாதம் தனது திருமணத்தில் கலந்து கொண்டதாகவும் சுட்டிக்காட்டினார். சான்றிதழில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் சிறுமியின் வயது கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர் வாதிட்டார். அந்த நபரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சிறுமி 18 வயதுக்கு குறைவானவர் என்பதை அரசுத் தரப்பால் நிரூபிக்க முடியவில்லை என்றும், எனவே போக்சோ சட்டத்தின் கீழ் அவரை விடுவிப்பதாகவும் கூறியது.
மேலும் “ எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட சிறுமி தனது வாக்குமூலத்தில் அந்த நபரை காதலிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதுபோன்ற குற்றங்கள் ரகசியமாக செய்யப்படுவதாகவும், அந்த நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.. பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவை கொடூரமான குற்றங்கள்.. அவை திறம்பட தீர்க்கப்பட வேண்டும்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதை தொடர்ந்து டிஎன்ஏ அறிக்கையை பதிவு செய்த நீதிமன்றம், சிறுமியின் குழந்தைக்கு தந்தை குற்றம்சாட்டப்பட்ட நபர் என்பது உறுதியாகி உள்ளது.. எனவே அந்த நபர் ஐபிசியின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.