fbpx

முதன்முதலில் கொரோனா வைரஸ் இப்படி தான் பரவியது.. அமெரிக்கா வெளியிட்ட புதிய தகவல்..

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனா உன் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன..

இந்நிலையில் சீனாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் என்று அமெரிக்காவின் எரிசக்தி துறை கூறியுள்ளது. அமெரிக்க தேசிய ஆய்வகங்களின் வலையமைப்பையும், சில மேம்பட்ட உயிரியல் ஆராய்ச்சிகளையும் அமெரிக்க எரிசக்தித்துறை மேற்கொள்கின்றன. இந்த சூழலில், அமெரிக்க எரிசக்தித்துறையின் ரகசிய புலனாய்வு அறிக்கை வெளியிடப்பட்டது.. சமீபத்தில் வெள்ளை மாளிகை மற்றும் நாடாளுமன்றத்தின் முக்கிய உறுப்பினர்களுக்கு இந்த அறிக்கை வழங்கப்பட்டது. அதில் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

அதாவது சீன ஆய்வகத்தில் இருந்து தவறுதலாக கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.. முன்னதாக, கடந்த 2021ல் சீனாவில் ஆய்வக கசிவு காரணமாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஏற்பட்டதாக அமெரிக்க உளவு அமைப்பான FBI கூறி இருந்தது..

சீனாவின் உஹானில் பல ஆய்வகங்கள் உள்ளன.. இந்த ஆய்வகங்களில் உஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி, சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் உஹான் இன்ஸ்டிடியூட் ஆப் உயிரியல் ஆய்வு மையம் ஆகியவை அடங்கும். உஹானில் உள்ள கடல் உணவு சந்தையில் ஏற்பட்ட பாதிப்பு முதலில் வைரஸின் ஆதாரமாக கருதப்பட்டது..

உலக சுகாதார அமைப்பின் விசாரணைகளுக்கு வரம்புகளை விதித்துள்ள சீனா, தனது ஆய்வகங்களில் இருந்து வைரஸ் கசிந்திருக்கலாம் என்று மறுத்துள்ளது.. மேலும் சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் தோன்றியதாக பரிந்துரைத்துள்ளது. சில விஞ்ஞானிகள், வைரஸ் இயற்கையாகவே தோன்றி ஒரு விலங்கிலிருந்து மனிதனுக்குப் பரவியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை யார் யாருக்கு கிடைக்கும்……? வெளியான புதிய தகவல்……!

Mon Feb 27 , 2023
கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை 10 வருடங்களுக்கு பிறகு கைப்பற்றியது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தெரிவித்த முக்கிய வாக்குறுதி என்னவென்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பாகும். அதன் பிறகு தேர்தல் நடைபெற்று திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து பல வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. ஆனால் மாதம் தோறும் பெண்களுக்கு உரிமை […]

You May Like