fbpx

தங்கம் வாங்க இது தான் செம சான்ஸ்.. இன்றும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. அதுவும் இவ்வளவா?

சென்னையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தீபாவளியன்று ரூ.59,640 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்த தங்கத்தின் விலை பின்னர் இறக்கமாக இருந்தது. அதன்படி கடந்த 17ஆம் தேதி ஒரு கிராம் ரூ.6,935-க்கும், ஒரு சவரன் ரூ.55,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் கடந்த 7 நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்திருந்த நிலையில் நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது. அதன்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.7,200க்கும் ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.57,600க்கு விற்பனையானது இந்நிலையில் இல்லத்தரசிகளுக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக தங்கத்தின் மீதான விலை இரண்டாவது நாளான இன்றும் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.960 சரிந்து ரூ.56,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7080க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் சென்னையில் தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1760 குறைந்துள்ளது. வெள்ளியின் விலையை பொறுத்தவரை கடந்த 7 நாட்களாக விலை எந்த மாற்றமுமின்றி காணப்பட்ட நிலையில் இன்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.3 குறைந்து ரூ.98க்கும் ஒரு கிலோவுக்கு ரூ.3,000 குறைந்து ரூ.98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More: தீவிரமாக வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. டெல்டா மாவட்டங்களுக்கு கட்டணமில்லா உதவி எண்கள் அறிவிப்பு..!!

English Summary

This is the best chance to buy gold.. The price of gold is extremely low today.. Is that all?

Kathir

Next Post

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் மருத்துவமனையில் அனுமதி..!!

Tue Nov 26 , 2024
Reserve Bank Governor Shaktikanta Das admitted to hospital..!!

You May Like