எதிர்வரும் 2024 ஆம் வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலை எதிர் கொள்வதற்கு ஆதம் பாஜக தற்போதைய தயாராகிவிட்டது. அதற்கான வேலைகளையும் தொடங்கி விட்டது என்று நான் சொல்ல வேண்டும் மேலும் இந்த முறையும் பிரதமர் நரேந்திர மோடி தான் என பாஜக தரப்பில் பட்டி, தொட்டி எங்கும் இப்போது இருந்து பிரச்சாரம் தொடங்கி விட்டது.
ஒருபுறம் பாஜக சுறுசுறுப்பாக நாடக மன்ற வேலைகளை தொடங்கி செய்து கொண்டிருக்கிற நிலையில் மறுபுறம் எதிர்க்கட்சிகள் ஆளும் தரப்பான பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று மிகப்பெரிய திட்டத்தை வகுத்து அதன்படி செயல்பட்டு வருகின்றன.
அதன்படி பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் பொது வேட்பாளர் யார்? என்று முடிவு செய்ததற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.
அதன்படி எதிர்க்கட்சிகளின் சார்பாக அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற போட்டியில் நிதீஷ் குமார், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் தலைமை மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருந்த நிலையில், ராகுல் காந்திக்கு போதுமான செல்வாக்கு பல்வேறு மாநிலங்களிலும், மக்களிடையேயும் இல்லை என்று கூறப்படுகிறது.
ஆகவே நிதர்சனத்தை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை, மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பழங்குடியினர் முதல் பல்வேறு தரப்பினரும், எதிர்க்கட்சிகளும் பெருவாரியான ஆதரவை வழங்கி இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதை தவிர்த்து காங்கிரஸ் ஒரு குடும்ப கட்சி என்ற அந்த பிம்பத்தை உடைக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் தலைமை இவ்வாறு ஒரு முடிவை எடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
இன்னொரு புறம் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை என்று பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டதால் அவர் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இழந்திருக்கிறார். அதை எப்படியாவது சரி செய்து விடலாம் என்றாலும் கூட, முக்கியமாக காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பக் கட்சியாக மாறிவிட்டது என்ற பாஜகவின் விமர்சனத்தை முறியடிக்கும் விதமாகவே, காங்கிரஸ் கட்சி இவ்வளவு துணிச்சலான இந்த முடிவை மேற்கொண்டு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே கடந்த பீகார் மாநில சட்டசபை பொதுத்தேர்தலின் போது தற்போதைய முதலமைச்சர் நிதிஷ்குமார் மிகப்பெரிய வெற்றியை கட்டுரையை தொடர்ந்து, அப்போது அடுத்து வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிதீஷ் குமார் தான் இருப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது மல்லிகார்ஜுனகார்கேவை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்திருப்பது புதுவிதமான செய்தியாக இருக்கிறது. ஆனால் பல்வேறு தரப்பினரிடமும் அவருக்கு ஆதரவு இருப்பதால் அவர் எந்த விதத்திலும் நிதீஷ் குமாருக்கு சளைத்தவர் அல்ல என்ற செய்தியும் நம்முடைய காதுக்கு எட்டுகிறது.
மேலும் சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டசபை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்று அங்கு ஆளும் தரப்பாக இருந்த பாஜகவை படுதோல்வியை சந்திக்க செய்தது மல்லிகார்ஜுன கார்கேவின் வியூகம் தான் காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் மிகப்பெரிய வெற்றி பெற உதவியாக இருந்தது என்றும் சொல்லப்படுகிறது.
நாளை நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட கூட்டத்தின் முடிவில் மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சிகளின் பொது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற உறுதி செய்யப்படாத தகவலும் கிடைத்திருக்கிறது.