தமிழ் சினிமாவின் 80 களில் கனவுக்கு கன்னியாக வலம் வந்தவர் சரீனா என்ற பெயரையுடைய நதியா. இவர் பெரும்பாலும் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவர், இயக்குனர் பாசில் 1985ல் தமிழில் இயக்கிய ‘பூவே பூச்சூடவா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கதாநாயகியாக நுழைந்தார். நதியாவுக்கு தமிழ் ரசிகர்கள் ஏகபோக வரவேற்பை கொடுத்தனர். மேலும், நதியாவின் அழகு பலரையும் ஈர்த்தது. பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றார். இவர் சினிமா துறையின் உச்சத்தில் இருக்கும் போது திடீரென சினிமாவை விட்டு விலகினார். நடிகை நதியாவிற்கு தொடர்ந்து வீரமணி என்பவர் தொல்லை கொடுத்து வந்தார். இவரின் இந்த செயல் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் இவர் ஏன் சினிமாவை விட்டு விலகினார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் சமீப காலமாக இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நதியா சினிமாவை விட்டு விலகிய காரணம் குறித்து தமிழா தமிழா பாண்டியன் தற்போது சில தகவல்களை கூறியுள்ளார். அதில் அவர் கூறியது, நடிகை நதியாவிற்கு அயோத்தி குப்பம் வீரமணி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து நதியா சினிமாலயா எடிட்டர் எம்ஜி வள்ளவனிடம் புலம்பியுள்ளார். அதற்கு அவர் இனிமேல் இங்கு இருக்காதே வெளிநாடு சென்றுவிடு என்று கூறியிருக்கிறார். இதனால் தான் நதியா தமிழ் சினிமாவைவிட்டு விலகிவிட்டார். அவரின் கட்டுப்பாட்டில் வர சொன்னதால் அதற்கு இடம் கொடுக்காமல் நதியா வெளிநாட்டுக்கு சென்று செட்டிலாகிவிட்டார். இப்படி சினிமாவில் நடக்கும் கொடுமைகளை ஒன்றுமே செய்யமுடியாது என்று தமிழா தமிழா பாண்டியன் கூறியிருப்பது தற்போது கோலிவுட்டை பரபரப்பாக்கியுள்ளது.
Read more: சந்திரமுகி பட பொம்மியா இது? ஷாக்கில் ரசிகர்கள்… வைரலாகும் புகைப்படம்..