குடிபோதையில் வாகனம் ஓட்டினால் வழக்கு பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை டிஜிபி வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; வாகன தணிக்கையின் போது வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தி வைத்த பிறகு வாகன தணிக்கை மேற்கொள்ள வேண்டும். வாகன தணிக்கையின் போது வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தாமல் மீறி செல்லும் போது அவர்களை பின் தொடர்ந்து விரட்டிச்செல்ல வேண்டாம். அடுத்த இடத்தில் வாகன சோதனை செய்யும் அலுவலரிடம் தகவல் தெரிவித்து வாகனத்தை நிறுத்த முயற்சி செய்ய வேண்டும். வாகன ஓட்டியிடம் மூச்சு பகுப்பாய்வு (Breathing Analyzer) கருவியால் மூச்சை ஊத வேண்டும் என முதலில் அறிவுறுத்தவேண்டும்.
குடிபோதையில் வாகனத்தை ஓட்டிவரும் நபர் மூச்சு பகுப்பாய்வு (Breathing Analyzer) கருவியால் ஆய்வு செய்த போது “30 மில்லி கிராம் அல்லது 100-ற்கும் மேற்பட்ட அளவுக்கு மேல் பதிவானால் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். மேற்படி நபர் ஓட்டி வந்த வாகனத்தை விசாரனைா அதிகாரியால் வாகனத்தை கைப்பற்றப்பட வேண்டும். வாகனத்தை ஓட்டி வந்த நபருக்கும் வாகனத்திற்கும் எந்தவிதத்தில் உரிமையானவர் என்பதை கண்டறிய வேண்டும். வழக்கு அதற்குரிய நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும்.
வாகன தணிக்கையின் போது பதிவு எண்ணையும் வாகனத்தின் சேஸ்சின் எண்ணையும் இன்ஜின் எண்ணையும் சரிபார்த்து மேற்படி வாகனத்தில் பதிவு எண் சரியானதா? அல்லது போலியானதா? கண்டறியப்பட வேண்டும். அப்படி என போலியானது என்றால் மேற்படி வாகனத்தை பறிமுதல் செய்து உரிய விசாரணை மேற்கொண்டு வாகன ஓட்டியிடம் முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இ-சலான் கருவியில் வழக்கு பதிவு செய்யப்பட்ட விவரம், வாகனத்தின் விவரம் அந்த வாகனத்தை ஓட்டி வந்தவரின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
வழக்கு பதிவு செய்யப்பட்ட விவரம் வாகனத்தின் உரிமையாளரின் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் வழக்கு மற்றும் அபராத தொகையின் விவரங்க அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.