தமிழகத்தில் அரசுக்கு முக்கிய வருவாயை ஈட்டி தரக்கூடிய துறைகளில் ஒன்று மிக முக்கியமானது டாஸ்மார்க் துறையாகும். இந்தத் துறையில் பண்டிகை நாட்களில் மட்டுமே அதிக அளவில் வசூல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு எத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான விபரத்தை அரசு வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு தீபாவளியை ஒட்டி நவம்பர் 3 மற்றும் 4-ம் தேதி 2 நாட்களில் ரூபாய் 431.03 கோடிக்கு மது விற்பனையானது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையொட்டி தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக ரூ.464.21 கோடி மதிப்பில் மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 23-ம் தேதி சென்னையில் ரூ. 51.52 கோடி, திருச்சியில் ரூ. 50.66 கோடி, சேலம் ரூ. 52.36 கோடி, மதுரை ரூ. 55.78 கோடி, கோவை-ரூ. 48.47 கோடி என மொத்தமாக ரூ. 258.79 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.
22-ம் தேதி சென்னையில் ரூ. 38.64 கோடி, திருச்சியில் ரூ. 41.36 கோடி, சேலத்தில் ரூ. 40.82 கோடி, மதுரையில் ரூ. 45.26 கோடி, கோவையில் ரூ. 39.34 கோடி என மொத்தமாக ரூ. 205.42 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.