fbpx

குடும்ப அட்டை இல்லாதவர்கள் e-Shram என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்..‌.! இவர்கள் மட்டும் தான்..

வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள், புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு e Shram என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில் வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள். புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு eShram என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், மேலும் மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரால் மேற்கண்ட மனுக்களின் மீது விசாரணை செய்து நிரந்தரமாக தமிழ்நாட்டில் தங்கியுள்ளவர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் தற்காலிகமாகவோ அல்லது குறுகிய காலத்திற்கு புலம் பெயர்ந்து அவர்களது சொந்த மாநிலத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் e-Shram மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் மேலும் மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கலாம்.

மேற்கண்ட மனுவினை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களின் மூலம் மனுதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்து புதிய குடும்ப அட்டை பெற்றவுடன் தமிழ்நாட்டில் “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று பயன் பெறலாம். எனவே, வெளிமாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்கள் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் ‌

Vignesh

Next Post

மருத்துவ கல்லூரிகளுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும்!… தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை!

Sun Oct 1 , 2023
புதிய வழிகாட்டு விதிமுறைகளை மீறும் மருத்துவ கல்லூரிகளுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. மருத்துவ கல்லுாரி சேர்க்கை உள்ளிட்ட மருத்துவ கல்வி தொடர்பான விதிகளை வகுக்க இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பட்டு வந்த நிலையில் இது தேசிய மருத்துவ ஆணையம்(என்எம்சி) என மாற்றப்பட்டது. இந்நிலையில் என்எம்சி புதிய வழிகாட்டு விதிமுறைகளை கடந்த 27ம் தேதி வெளியிட்டது. அதில், மருத்துவ கல்லுாரிகள் சட்டப்பூர்வ விதிகள், […]

You May Like