fbpx

கட்சியில் இவர்களுக்கு எல்லாம் பதவி நிச்சயம்…! தமிழக வெற்றி கழகத்தின் புஸ்சி ஆனந்த் அறிவிப்பு..!

யாரெல்லாம் கட்சிக்கு உழைத்தார்களோ அவர்களுக்கு பதவி தேடி வரும் என தமிழக வெற்றி கழகத்தின் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மாநாட்டை நடத்தி முடித்த நிலையில், உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய், கட்சிக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், வரும் தேர்தலுக்கு முன் கட்சியைப் பலப்படுத்தவும் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ள விஜய், அதற்கான பட்டியலையும் தயார் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த்; மற்ற கட்சிகளில் கூட்டம் என்றால் 200, 300 பேர் இருப்பார்கள். நமது கட்சியில்தான் 2 ஆயிரம், 3 ஆயிரம் கூடி இருக்கிறார்கள். நான் இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக கட்சி அறையில் இருந்தேன். அப்போது எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள்? என்று கேட்டேன். 30, 40 பேர் மட்டும் வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.

இன்னும் அரை மணி நேரத்தில் பாருங்கள் என்று சொன்னேன். அதை போன்று கூட்டம் திரண்டுள்ளது. இதுதான் தளபதி (விஜய்) மீது வைத்திருக்கிற பாசம், அன்பு. தளபதியின் அறிவுறுத்தலின்படி கட்சியில் உழைப்பவர்களுக்கு மிக விரைவில் பதவிகள் வழங்கப்படும். யாரெல்லாம் கட்சிக்கு உழைத்தார்களோ அவர்களுக்கு தேடி போய் பதவி கொடுப்பதுதான் தமிழக வெற்றி கழகம். கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரையில் பதவிகள் வழங்கப்பட இருக்கிறது. நம் தலைவரை முதலமைச்சர் இருக்கையில் அமர வைப்பதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

English Summary

Those who have worked for the party will find a position.

Vignesh

Next Post

திரையுலகமே ஷாக்!. ஜி.வி.பிரகாஷை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா தம்பதி விவாகரத்து!. மகன் கூறும் காரணம்!.

Wed Nov 20 , 2024
The film industry is shocked! After GV Prakash, AR Rahman - Saira couple divorce!. Is this the reason?

You May Like