fbpx

அச்சுறுத்தும் ஜே.என்.1 வகை கொரோனா!… கேரளாவில் கண்டறியப்பட்ட வைரஸின் தன்மை எப்படிப்பட்டது?

கேரளாவில் கொரோனா வைரஸ் திரிபான BA.2.86-ன் புதிய துணை வகையான ஜே.என்.1 வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் தன்மை, பாதிப்புகள் குறித்து நிபுணர்களின் கருத்துகளை விரிவாக்க பார்க்கலாம்.

கேரளாவில் 78 வயதான மூதாட்டியிடம் நவம்பர் 18-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவில், அவருக்கு புதிய துணை வகையான JN.1 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு லோசன காய்ச்சல் அறிகுறிகள் இருந்தது என்றும், தற்போது அவர் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டார் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக, திருச்சியில் இருந்து அக்டோபர் 25-ம் தேதி சிங்கப்பூர் சென்ற தமிழருக்கும் JN.1 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. என்றாலும், திருச்சியிலோ அல்லது தமிழகத்திலோ வேறு எங்கும் பாதிப்புகள் இல்லை. இந்தியாவில் வேறு எங்கும் JN.1 வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு ஆய்வக அமைப்புகளுடன் இந்தியாவில் காணப்படும் புதிய கொரோனா திரிபுகளைக் கண்காணித்து வரும் ‘இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கன்சோர்டியம்’ (INSACOG) நிறுவனம், கேரளாவில் தற்போது பரவும் கரோனா வைரஸ் குறித்தும், அதன் பாதிப்புகள் பற்றியும் கண்காணித்து வருகிறது. அந்த அமைப்பின் தலைவர் என்.கே அரோரா கூறுகையில், “இந்த புதிய வகை திரிபானது நவம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டது. இது BA.2.86 திரிபின் துணை வகைதான் இந்த JN.1 சப்-வேரியன்ட் வைரஸ்.இது இந்தியாவில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய கண்காணிப்பு முடிவுகளின்படி, இந்த வகை வைரஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கோ, தீவிரமான பாதிப்புகளோ இந்தியாவில் உருவாகவில்லை” என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டதுதான் இந்த JN.1 சப்-வேரியன்ட். இதன் தன்மைகள் குறித்து தேசிய இந்திய மருத்துவ சங்கத்தின் ‘கோவிட் டாஸ்க் ஃபோர்’ துணைத் தலைவர் ராஜீவ் ஜெயஜீவன் கூறும்போது, “ஏழு மாத இடைவெளிக்குப் பின்னர் இந்தியாவில் பாதிப்புகளின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது. கேரளாவில் சிலர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது முன்பு போல பாதிப்பு பற்றிய கவலையை அதிகரித்துள்ளது. வைரஸின் மரபணு மாதிரி வரிசைகள் ஒவ்வொரு பகுதியில் பரவி வரும் வைரஸ்களை சுட்டிக்காட்டி வருகிறது. உதாரணமாக, இந்தியாவில் 2023 ஏப்ரல் மாத கோவிட் அலையின்போது XBB துணை திரிபுகள் கண்டறியப்பட்டன. டிசம்பர் மரபணு வரிசை குறித்த முடிவுகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், முதல்கட்ட முடிவுகளில் JN.1 பாதிப்பானது கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது “சிங்கப்பூர் மற்றும் கேரளாவில் கடந்த ஒரு வாரமாக புதிய வகை வைரஸ் தொற்று பரவி வருகிறது. கேரளாவில் பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத் துறையை, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘கேரளாவில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. மிதமான பாதிப்புகளே உள்ளன’ என்று தெரிவித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்.

Kokila

Next Post

குதிரை பாலுக்கு இவ்வளவு மவுசா?… ஒரு லிட்டர் ரூ.2500க்கு விற்பனை!… அவ்வளவு மருத்துவ குணம் கொண்டதாம்!

Sun Dec 17 , 2023
திருச்சி மணப்பாறை பகுதியில் குதிரை பால் ஒரு லிட்டர் ரூ.2500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிறைய மருத்துவ குணம் கொண்டுள்ளதால் குதிரை பாலை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் மாட்டுப்பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால், கழுதைப்பாலை தொடர்ந்து தற்போது குதிரைப் பாலுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இந்த குதிரை பால் மிக மிக அரிதாகதான் கிடைக்கும். இந்தநிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். பட்டதாரியான இவர் தனியார் […]

You May Like