fbpx

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன்..!! 29 மாவட்டங்களில் பொளக்க போகுது மழை..!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (டிசம்பர் 7) முதல் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 29 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 3 மணி நேரம் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருச்சி, நாமக்கல், சேலம், கரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் 10 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கிருஷ்ணகிரி, தருமபுரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Chella

Next Post

இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை கிடையாது..! எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..! முழு விவரம்..

Mon Jan 8 , 2024
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 08-ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் […]

You May Like