fbpx

டைம் டேபிள் போட்டு 3 மூன்று சகோதரிகளுடன் குடும்பம் நடத்தும் நபர்! சந்தோசமான வாழ்க்கைக்கு கொடுத்த டிப்ஸ்!

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரிகளையும் ஒரே நபர் திருமணம் செய்து அட்டவணை போட்டு அவர்களுடன் வாழ்ந்து வருகிறார் என்ற செய்தி  உலகத்தையே அதிர்ச்சியிலும்  ஆச்சரியத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவைச் சார்ந்தவர் ஸ்டீவோ. இவர்தான் ஒரே பிரசவத்தில் பிறந்த ஒரே மாதிரி அங்க அடையாளங்களை கொண்ட மூன்று சகோதரிகளை திருமணம் செய்து இருக்கிறார். கென்யாவைச் சார்ந்த மூன்று சகோதரிகள் கேட், ஈவ் மற்றும் மேரி இவர்கள் கிறித்துவ நற்செய்தி இசைப் பாடகிகளாக உள்ளனர். இந்த சகோதரிகளில் கேட்.ஸ்டீவோ  என்பவரை திருமணம் செய்தார். அதன் பிறகு தான் இந்த ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. கேட்டை சந்தித்து  திருமணம் செய்து அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஸ்டீவோ  பிறகு கேட்டின் சகோதரிகளை  சந்தித்து உரையாடி இருக்கிறார். அவர்களை சந்தித்து உரையாடிய பின் மற்ற இரண்டு சகோதரிகளையும் தான் திருமணம் செய்ய விருப்பப்படுவதாக கேட்டிடம் கூறியிருக்கிறார் ஸ்டீவோ. இதற்கு கேட்டும் சம்மதிக்கவே விரைவிலேயே மற்ற இரண்டு சகோதரிகளையும்  மணந்திருக்கிறார் ஸ்டீவோ. இது பற்றி கூறியுள்ள அவர்  இதை ஏன் மக்கள் எல்லாரும் வினோதமாக பார்க்கிறார்கள் என்று தனக்குப் புரியவில்லை எனக் கூறியிருக்கிறார்.  சகோதரிகளான ஈவு மற்றும் மேரி ஆகியோரை சந்தித்த பின்  தான் ஒரு பெண்ணுக்காக மட்டும் உருவாக்கப்படவில்லை என்பதை  உணர்ந்ததாக தெரிவித்துள்ளார் ஸ்டீவோ.

பிறப்பால் தன்னை  பலதாரமணம் கொண்டவராக கூறும் ஸ்டீவோ  மூன்று சகோதரிகளுடனும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மூன்று பெண்களையும் சமாளிப்பது கடினமாக இல்லையா என்ற கேள்விக்கு  அவரவருக்கான நேரங்களை கொடுத்து மூன்று பேரையும் எந்தவித பாகுபாடும் இன்றி சமமாக தான் நடத்தி வருவதாக கூறியிருக்கிறார். மேலும் அது ஒரு கடினமான வேலை இல்லை என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் ஸ்டீவோ. அனைவரையும் சமமாக நடத்துவதில் தான் தன்னுடைய  சாமர்த்தியம் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார். கண்டிப்பான ஒரு கால  அட்டவணையை தான் பின்பற்றுவதாகவும் அதன்படி ஒவ்வொருவரிடமும்  சமமான நேரத்தை செலவிடுவதாகவும் தெரிவித்திருக்கிறார் ஸ்டீவோ. வாரத்தின் முதல் நாளை மேரியுடன் செலவிடும் ஸ்டீவோ செவ்வாய்க்கிழமை கேட்டுடனும் புதன்கிழமை ஈவுடன்  செலவிடுவதாகவும் இது சுழற்சி முறையில் அடுத்தடுத்த நாட்களுக்கும் வரும் எனவும் தெரிவித்திருக்கிறார் ஸ்டீவோ.

Rupa

Next Post

பெண்களுக்கு குட்நியூஸ்... வீட்டில் இருந்தே வட்டி பெறலாம்... சிறுசேமிப்பு திட்டத்தை அறிவித்த மத்திய அரசு!

Wed Feb 8 , 2023
பெண்கள் மற்றும் சிறுமிகள் பெயரில் 2 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யும் வகையில் மகிளா சம்மன் பச்சத் பத்ரா என்ற புதிய சிறுசேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகையில் 67.7% பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்திருந்தது. அந்தவகையில், பெண்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மத்திய-மாநில அரசுகள் பல்வேறு […]

You May Like