fbpx

காலில் வெடிப்பு இருக்கா? இதை செய்யாவிட்டால் தோல் முற்றிலும் கெட்டுவிடும்!!!

பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று கால் வலி. இதற்க்கு முக்கிய காரணம் அவர்களின் காலில் இருக்கும் வெடிப்பு தான். உடலில் நீர்ச்சத்து குறைப்பாட்டால் பாதங்களில் வறட்சி காரணமாக வெடிப்பு ஏற்படுகிறது. இதேபோல் உடல் எடை அதிகரிப்பால், அழுத்தம் ஏற்பட்டு பாத வெடிப்பு உண்டாகிறது. பாத வெடிப்பு, ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் உள்ளது.

முகத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ள க்ரீம்களை வாங்கிப் பூசும் நாம், நமது முழு எடையையும் தாங்கும் நமது பாதத்தை கவனிப்பது இல்லை. பாதத் தோல் வறண்டு, புண்ணாகி, வெடிப்பு ஏற்பட்டு வலி வந்த பின்னால் தான் நம் உடலில் அப்படி ஒரு பகுதி இருப்பதையே உணர்கிறோம். ஆனால் இது முற்றிலும் தவறு. நமது முகத்திற்கு காட்டும் அதே அக்கறையை நாம் பாதத்திற்கும் காட்ட வேண்டியது அவசியம்.

குளிர்காலம் வந்தாலே சரும வறட்சி காரணமாக பாதத்தின் குதிகால் சருமம் வெடிக்கத் தொடங்கும். வெடிப்புள்ள குதிகாலில் தூசி மற்றும் அழுக்கு படிந்து தொற்று ஏற்பட்டு நடப்பதே சிரமமாக மாறிவிடும். இதற்க்கு, குளிர்காலத்தில் எப்போதும் கால் முழுவதையும் மறைக்கும் பாதணிகளை அணிவது நல்லது. முகத்திற்கு கிரீம்கள் பயன்படுத்துவது போல், கை, கால்களுக்கும் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்து வேண்டும்.

மேலும், அவ்வப்போது, உங்கள் பாதங்களை ஸ்க்ரப் செய்ய வேண்டும். தினமும் தூங்கும் முன், கால்களை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் வைத்து, பின்னர் சோப்பு பயன்படுத்தி கால்களை சுத்தப்படுத்த வேண்டும். பின் கால்களை உலர வைத்து, மாய்சரைசர் அல்லது தேங்காய் எண்ணெயை தடவவும். பின் சாக்ஸ் அணிந்துக்கொள்ளுங்கள்.

இப்படி நாம் தொடர்ந்து செய்வதால், பாதங்கள் மென்மையாக நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும். நீங்கள் பெட்ரோலியம் ஜெல்லி, ஆலிவ் ஆயில், கற்றாழை க்ரீம் போன்றவற்றையும் மாய்ஸ்ச்சரைசராகப் பயன்படுத்தலாம். சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பாதவெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தோல் முற்றிலுமாக கெட்டுவிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் இந்த குளிர்காலத்தில், நமது பாதத்திற்கு சற்று கவனம் செலுத்தி பராமரிப்பது அவசியம்.

Read more: “எனக்கு அம்மா வேணும் பா” கதறி துடித்த 4 வயது சிறுவன்; போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

English Summary

tips to cure cracks

Next Post

தூள்...! 90% தள்ளுபடி விலையில் மருந்துகள்... புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கும் முதல்வர்...!

Mon Feb 24 , 2025
Medicines at 90% discount... CM to launch new scheme today

You May Like