நாட்டிலேயே புகழ்பெற்ற புனித யாத்திரை தலமாக மாறுகிறது திருப்பதி ஏழுமையான் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிக மக்கள் வந்து செல்லும் திருப்பதி நகரத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஒரு நகர செயல்பாட்டு மையத்தை (COC) நிறுவி, திருப்பதியில் பல்வேறு தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) தீர்வுகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இந்த திட்டத்தின் முதன்மை இலக்கு, நகர நிர்வாகத்தை மேம்படுத்துவது மற்றும் குடியிருப்பாளர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மேம்பட்ட சேவைகளை வழங்குவது தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ICT தீர்வுகள் ஒரு ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை உள்ளடக்கியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு நகரங்களை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் முக்கிய நகரங்களின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு என மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் புனே, ஆக்ரா, இந்தூர், அமராவதி உள்ளிட்ட பல நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 7 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.