திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குன்னூர் கிராமத்தில் வசித்து வருபவர் அர்ஜுனன் இவருடைய மனைவி லட்சுமி இருவரும் விவசாய கூலி தொழிலாளர்களாக இருந்து வருகிறார்கள். இந்த தம்பதிகளின் மகள் பிரகதீஸ்வரி (18) நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் நேற்று வீட்டின் அருகே இருந்த குளத்தில் பிரகதீஸ்வரி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் சாலையோர மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது இதில் மின் கம்பி அறுந்து குளத்தில் விழுந்தது. இதன் காரணமாக, குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பிரகதீஸ்வரி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடித்துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
வெளியே சென்று நீண்ட நேரம் ஆன பின்னரும் பிரகதீஸ்வரி வீடு திரும்பாததால் அவரை தேடிச் சென்ற போது குலத்தில் அவர் உயிரிழந்த நிலையில் கிடப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ஆளிவளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மின்கம்பத்தின் மீது டிராக்டரை மோதி விபத்து உண்டாக்கிய ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.