fbpx

Tngovt: 15 வயது முதல்‌ 35 வயது வரை உள்ளவர்களுக்கு ரூ.1 லட்சம்…! மே இறுதி வரை விண்ணப்பிக்கலாம்…!

சமூதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும்‌ இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும்‌ பொருட்டு “முதலமைச்சர்‌ மாநில இளைஞர்‌ விருது” ஒவ்வொரு ஆண்டும்‌ சுதந்திர தினத்தன்று 15 வயது முதல்‌ 35 வயது வரை உள்ள 3 ஆண்கள்‌ 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000/- ரொக்கம்‌, பாராட்டுப்‌ பத்திரம்‌ மற்றும்‌. பதக்கம்‌ ஆகியவைகளை உள்ளடங்கியதாகும்‌.

2023-ஆம்‌ ஆண்டிற்கான முதலமைச்சர்‌ மாநில இளைஞர்‌ விருது எதிர்வரும்‌ 15.08.2023 அன்று நடைபெறும்‌ சுதந்திர தின விழாவில்‌ வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக தகுதிகள்‌ வரையறுக்கப்பட்டுள்ளன. அதன் படி, 15 வயது முதல்‌ 35 வயது வரையுள்ள ஆண்‌ / பெண்‌ ஆகியோர்‌ விண்ணப்பிக்கலாம்‌.ஏப்ரல்‌ 1, 2022 (01.04.2022) அன்று 15 வயது நிரம்பியவராகவும்‌ மார்ச்‌ 31, 2023 (31.08.2023) அன்று 35 வயதுக்குள்ளாகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

கடந்த நிதியாண்டில்‌ (2022-2023) அதாவது 01.04.2022 முதல்‌ 31.03.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள்‌ மட்டுமே கருத்தில்‌ கொள்ளப்படும்‌. விருதிற்கு விண்ணப்பிக்கும்‌ முன்பு குறைந்த பட்சம்‌ 5 வருடங்கள்‌ தமிழகத்தில்‌ குடியிருந்தவராக இருத்தல்‌ வேண்டும்‌. (சான்று இணைக்கப்பட வேண்டும்‌).

விண்ணப்பதாரர்கள்‌ சமுதாய நலனுக்கான தன்னார்வத்துடன்‌ தொண்டாற்றியிருக்க வேண்டும்‌. அவ்வாறு அவர்கள்‌ செய்த தொண்டு கண்டறியப்படக்‌ கூடியதாகவும்‌. அளவிடக்‌ கூடியதாகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. மத்தியமாநில அரசுகள்‌, பொதுத்துறை நிறுவனங்கள்‌, பல்கலைக்கழகங்கள்‌/ கல்லூரிகள்‌/பள்ளிகளில்‌ பணியாற்றுபவர்கள்‌ இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பதாருக்கு உள்ளூர்‌ மக்களிடம்‌ உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில்‌ கணக்கிற் கொள்ளப்படும்‌.. இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பிக்க கடைசி நாள் 31.05.2023 அன்று மாலை 4.00 மணி ஆகும்‌. விண்ணப்பங்கள்‌ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in மூலம்‌ மட்டுமே விண்ணப்பங்கள்‌ சமர்ப்பித்தல்‌ வேண்டும்‌.

Vignesh

Next Post

இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை...! மீண்டும் எப்போது பள்ளி திறக்கும்...?

Sat Apr 29 , 2023
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நேற்றுடன் முடிந்தது. இந்த நிலையில் இன்று முதல் கோடை விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள், கடந்த மாதம் நடந்த முடிந்தது. மீதம் உள்ள வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு மற்றும் மூன்றாம் பருவ தேர்வுகள், 18ம் தேதி முதல் நடைபெற்றது. நேற்றுடன் […]

You May Like