தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Radiographer, Physiotherapist, Multipurpose Health Worker, Security Guard பணிகளுக்கு என 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. குறிப்பாக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில், B.Sc Radiography / DRTT / DRDT / Degree / Certificate Course/ Bachelor of Physiotherapy/ 8-ம் வகுப்பு தேர்ச்சி என பணிக்கு ஏற்றபடி டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.13,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைவரும் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் 10.11.2022 தேதிக்குள் அனுப்பிவைக்க வைக்க வேண்டும்.
For More Info: https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2022/10/2022103142.pdf