fbpx

BREAKING NEWS: “அடுத்த 2 நாட்கள் தமிழகத்தில் நிலவும் புது சிக்கல்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

கடந்த மாதத்தில் இருந்து தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் எப்போதும் அச்ச உணர்வு உடனே இருந்து வருகின்றனர். கடந்த சில தினங்களாகவும் தமிழகத்தில் ஆங்காங்கே பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிய வானிலை எச்சரிக்கை தமிழகத்திற்கு வெளியாகி இருக்கிறது.

இந்த எச்சரிக்கையின் படி தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் பெரும்பாலான இடங்களில் அதிகாலை மற்றும் இரவு வேளையில் பனிமூட்டமாக இருக்கும் எனவும் எச்சரித்து இருக்கிறது .

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது . இதனைத் தொடர்ந்து ஜனவரி 18 முதல் இருபதாம் தேதி வரை தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Post

கூகுள் பே செயலியில் ரூ.8 லட்சம் வரை கடன்..!! எப்படி பெறுவது..? எப்படி செலுத்துவது..? வட்டி விவரம் உள்ளே..!!

Tue Jan 16 , 2024
டிஜிட்டல் மயமாகும் உலகில் மக்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறி வருகின்றன. இந்த டிஜிட்டல் பேமெண்ட்டில் லோன் வாங்கலாம் என்பது உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்..? இந்த வசதியை Google Pay வழங்குகிறது. கூகுள் பே மூலமாக நீங்கள் ரூ.8 லட்சம் வரை கடன் பெறலாம். மேலும், மாதாந்திர இஎம்ஐ ரூ.1,000 முதல் தொடங்குகிறது. ஆனால், இங்கு நீங்கள் பெறும் கடன் தொகை மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் காலத்தின் அடிப்படையில் […]

You May Like