fbpx

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி,நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம்.

நாளை தென்தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 21.01.2024 முதல் 24.01.2024 வரை; தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

உறைபனி எச்சரிக்கை: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சவெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

ரூ.6,000 வெள்ள நிவாரண தொகைக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? வங்கிக் கணக்கிற்கு வரும் பணம்..!!

Fri Jan 19 , 2024
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரண தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ரேஷன் அட்டை இல்லாதவர்கள் வீட்டு வாடகை ஒப்பந்தம் மற்றும் கேஸ் பில் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து 6,000 ரூபாய் வெள்ள நிவாரண நிதி பெற ரேஷன் கடைகளில் விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தனர். ஆனால், அவர்களுக்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை. இந்நிலையில், ரேஷன் கார்டு […]

You May Like