fbpx

தமிழக மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு….! அடேங்கப்பா இவ்வளவு சம்பளமா…?

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஒரு வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில் அந்த பல்கலைக்கழகத்தில், காலியாக இருக்கின்ற assistant professor பணிக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி தொடர்பான முழுமையான விவரங்களையும் தெரிந்து கொண்டு, விண்ணப்பம் செய்து பயனடையலாம்.

Assistant professor பணிக்கு நான்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில், B.com,MBA, PhD, m,sc,M.E,M.Tech என்று இந்த பணிக்கு தொடர்பான, ஏதாவது ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. வயது வரம்பில் வழங்கப்பட்டிருக்கின்ற தளர்வுகள் பற்றி அறிந்து கொள்வதற்கு, அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு 40,000 முதல் 45000 ரூபாய் வரையில், மாத சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வமான முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 4.9. 2023 தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Download Notification PDF 1
Download Notification PDF 2

Next Post

உலகிலேயே இந்தியாவில் தான் இளம் வயதிலேயே நீரிழிவு நோய் வருகிறதாம்….! எதனால் தெரியுமா….?

Sun Sep 3 , 2023
உலகிலேயே இந்தியாவில் தான், அதிக அளவில் நீரழிவு நோய் ஏற்படுகிறது என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. அதிலும், இளம் வயதிலேயே இந்திய நாட்டில் இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கின்ற உணவுப் பொருளை நாம் சாப்பிடுவது தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு முன்னெல்லாம், 40 முதல் 50 வயதுக்கு மேலே இருப்பவர்களுக்குத்தான் நீரிழிவு நோய் இருக்கிறதா? என்று பரிசோதனை செய்ய சொல்வார்கள். ஆனால், […]

You May Like