தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 368 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிபணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை என மொத்த 19 பதவி வகைமையின் கீழ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு என மொத்தம் 368 காலியிடங்கள் உள்ளன. நவம்பர் 11-ம் தேதிக்குள் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வானது 2024 ஜனவரி மாத 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இருப்பினும், தாட்கோ நிறுவனத்தின்உதவி பொறியியாளர் (கட்டடவியல்) பதவிக்கு மட்டும் நேர்முக தேர்வு இல்லாமல் வெறும் எழுத்துத் தேர்வில் மட்டுமே சேர்க்கை நடைபெறும். ஆர்வம் உள்ள நபர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.