தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, குரூப் 2-ஏ தேர்வு முடிவுகள் சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் சென்று பார்க்கலாம். முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5,520 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் மே 21ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 9.94 லட்சம் பேர் எழுதினார்கள். மகளிருக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவற்றில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் பல கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த செயல்முறைகள் எல்லாம் நிறைவடைந்துள்ள நிலையில் முடிவுகள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த பிப். 23- ஆம் தேதி வெளியிட்டது. மார்ச் 23- ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரை இல்லாத வகையில் 11.78 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தனர். ஆண்களை விட பெண்கள் 1.85 லட்சம் பேர் கூடுதலாக விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.