டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் இந்த முறை கட் ஆப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில், கடந்த ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை 20 லட்சம் பேர் வரை எழுதினர்.
குரூப் 4 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு எதுவும் இல்லை. அதாவது இந்த எழுத்து தேர்வில் உரிய கட் ஆப் மார்க் பெறுவோர் ஆவண சரிபார்ப்பிற்குப் பிறகு பணியிடங்கள் ஒதுக்கப்படும். டிஎன்பிஎஸ்சி இதுவரை கட் ஆப் மார்க்குகளை அறிவிக்கவில்லை. அதேநேரம் இந்தாண்டு கட் ஆப் மார்க் என்னவாக இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம். தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
எப்போதும் கேட்பதை விட இந்த முறை கணிதத்தில் 2 கேள்விகள் கூடுதலாக இருந்தன. அதேபோல் பொது அறிவு கேள்விகள் கடினமாக இருந்தன. 10 கேள்விகள் வேறு தரத்தில் இருந்தன. குரூப் 4 தேர்வு என்றாலும் அது குரூப் 2க்கு இணையாக சில கேள்விகள் குரூப் 1க்கு இணையாக கேட்கப்பட்டது. இந்த தேர்வு முன்பை விட கடினமாக இருந்ததால் கட் ஆப் குறைய வாய்ப்புள்ளன. இதில் பொதுப் பிரிவினரில் ஆண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 146-151 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பொதுப் பிரிவில் பெண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 152 – 155ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல இதர பிற்படுத்தப் பிரிவினரில் (ஓபிசி) ஆண்களுக்கு 143-147, பெண்களுக்கு 146-150, பிற்படுத்தப்பட்ட பிரிவு முஸ்லீம் (பிசிஎம்) ஆண்களுக்கு 142 -145 பெண்களுக்கு 139-146 கட் ஆப் மார்க்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படித்தான் வழக்கமாக மதிப்பெண் வழங்கப்படும். ஆனால், இம்முறை கடந்த முறையை விட 2 மதிப்பெண் குறைவாக வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Read More : இலவச வீடு!. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா!. இந்த திட்டத்திற்கு யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?