fbpx

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க.. தடுப்பூசியை எந்த கையில் செலுத்த வேண்டும்.? ஆச்சரியம் அளிக்கும் ஆய்வு முடிவுகள்.!

மனித உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை தூண்டுவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஊசிகள் போடப்படுகிறது. அம்மை, காச நோய், மஞ்சள் காமாலை, நிமோனியா போன்ற நோய்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. சமீபத்தில் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கும் தடுப்பூசி கண்டறியப்பட்டு செலுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தடுப்பூசிகளை இரண்டு கைகளிலும் மாற்றி செலுத்திக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக மருத்துவ ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆராய்ச்சியை அமெரிக்காவின் ஒரேகான் நகரில் உள்ள, ஒரேகான் ஹெல்த் அன்ட் சயின்ஸ் யூனிவர்சிட்டி நடத்தியது. இந்த ஆய்வின் முடிவுகளில் இரண்டு கைகளிலும் மாற்றி தடுப்பூசி செலுத்தி கொண்டு அவர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆராய்ச்சி கொரோனா நோய் தொற்று காலத்தில் 947 நபர்களிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பங்கு கொண்ட நபர்களுக்கு கோவில் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வுகளின் முடிவில் ஒரே கையில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை விட இரண்டு கைகளிலும் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக வெளியாகி இருக்கிறது.

இரண்டு கைகளிலும் தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இரண்டாவது தடுப்பூசிக்கு பிறகு 395 நாட்கள் நீடித்திருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது. இவர்களுக்கு ஒமிக்ரான் வேரியண்ட் மற்றும் சார்ஸ் COV-2 வைரஸ்களுக்கு எதிரான ஆன்ட்டிபாடிகள் இருந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் இல்லை என்றாலும் இரண்டு கைகளிலும் தடுப்பூசிகளை மாற்றி செலுத்தி கொள்வதன் மூலம் lymph nodes என்று அழைக்கப்படும் நிணநீர் கணுக்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சிகள் பற்றி தனது கருத்துக்களை தெரிவித்துள்ள தொற்று நோய் பிரிவு பேராசிரியரும் எழுத்தாளர் மார்செல் கர்லின் ” இரண்டு கைகளிலும் மாற்றி தடுப்பூசிகளை செலுத்துவதால் உடலின் இரண்டு இடங்களில் மெமரி ஃபார்மேஷன் நடப்பதாக தெரிவித்திருக்கிறார். இது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது என்றும் கூறியுள்ளார். இந்த ஆய்வினை பற்றிய கட்டுரை கேரளா ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் இன்வெஸ்டிகேஷன் என்ற இதழில் வெளியாகி இருக்கிறது.

Next Post

அரசால் விஜய்க்கு வந்த புதிய சிக்கல்..!! திருமண மண்டபங்களுக்கு இப்படி ஒரு சோதனையா..?

Fri Feb 9 , 2024
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும்போதே விஜய் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் பிசினஸும் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. விஜய்யின் அரசியல் வருகைக்கு பின் தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், விஜய்க்கு மறைமுகமாக அரசு குடைச்சல் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்க்கு சொந்தமாக சென்னை […]

You May Like